அமைதிப் பாலங்களை விளையாட்டால் கட்டியெழுப்ப முடியும்

da roleta de casinoகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

da lobo888: விளையாட்டும் ஆன்மீகமும் என்ற தலைப்பில் மே மாதம் 16 முதல் 18ஆம் தேதி வரை உரோம் நகரில் அனைத்துலகக் கருத்தரங்கு ஒன்று இடம்பெற உள்ளது.

பிரான்சின் பாரிசில் இவ்வாண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதிவரை இடம்பெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னர் வத்திக்கானாலும் திருப்பீடத்திற்கான பிரான்ஸ் தூதரகத்தாலும் இணைந்து ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள இந்த பன்னாட்டு கருத்தரங்கில் ஏறக்குறைய 200 பேர் கலந்துகொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையைச் சார்ந்தோர், விளையாட்டு வீரர்களுக்கான மேய்ப்புப் பணியில் ஈடுபடுவோர் என 200 பேர் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கில், இந்த நவீன உலகில் விளையாட்டுக்களின் ஆன்மீக உட்கூறுகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

உலகில் அமைதியின் பாலங்களை விளையாட்டுக்களால் கட்டியெழுப்ப முடியும் எனவும், ஆன்மீக வாழ்வில் விடாமுயற்சியையும், ஒழுங்குமுறையையும் ஊட்ட விளையாட்டுகள் உதவுகின்றன எனவும், விளையாட்டு வீரர்களைச் சந்தித்தபோது திருத்தந்தை பிரான்சிஸ் கூறியவைகளை பத்திரிகையாளர் கூட்டத்தில் எடுத்துரைத்தார், கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் José Tolentino Mendonça.

விளையாட்டுக்கள் வழி மேலும் சகோதரத்துவம் நிறைந்த உலகை கட்டியெழுப்புதல், விளையாட்டுகள் திருஅவைக்கும், திருஅவை விளையாட்டுகளுக்கும் சொல்லவருபவை என்ன என்ற கேள்விகள், விளையாட்டுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவு என்பன போன்று பல்வேறு தலைப்புகளில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்